வாகன விபத்துகளில் 11 வயது பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி

Published By: Digital Desk 3

19 Apr, 2023 | 03:15 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 11 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முணமல்தெனிய - கட்டுபொத வீதியின் அங்கமுவ பிரதேசத்தில் பாடசாலை முடிந்து பஸ் ஒன்றில் மீண்டும் வீடு  திரும்பிக் கொண்டிருந்த மாணவர் பஸ்ஸில் இருந்து இறங்கி அதன் பின் பக்கத்தால் வீதியைக் கடப்பதற்கு முயன்ற போது வீதியில் வந்த சிறிய ரக லொறி மோதியுள்ளது. காயமடைந்த மாணவன் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  11 வயதுடைய வலவத்த, அனுக்கன்ஹென பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாணந்துரை -இரத்தினபுரி பிரதான வீதியின் நம்பபான பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 25 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனம் விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹமாபொல சந்தியில் பிடகும்புரவில் இருந்து மெதகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 57 வயதுடைய கொகுக்னேவ, பிபில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில்...

2024-10-13 19:23:56
news-image

ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

2024-10-14 02:42:39
news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57