ஜேர்­ம­னி­யி­லுள்ள பல அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் பாது­காப்புக் கருதி எதிர்­வரும் புது­வ­ருட தினத்தில் வாண­வெ­டி­களைக் கொளுத்­து­வ­தற்கு தடைவிதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜேர்­ம­னியில் புதுவருட தினத்தில் வாண­வேடிக்கைகளால் அனைத்து நகர்­களும் களை­கட்­டு­கின்ற நிலையில் அந்நாட்­டி­லுள்ள 4 மாநி­லங்கள் அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் வாண­வெ­டி­களை ெவ­டிக்க தடைவிதித்­துள்­ளன.

ஏற்­க­னவே ஜேர்­ம­னி­யி­லுள்ள அக­தி­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­களைக் கருத்திற்கொண்டே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஜேர்மனி கடந்த வருடம் புதுவருட வாணவேடிக்கைகளுக்காக 120 மில்லியன் யூரோவை செலவிட்டிருந்தது.