(எம்.மனோசித்ரா)
தேசிய அரசாங்கம் தொடர்பில் மக்கள் ஆணையற்ற இந்த அரசாங்கத்துடன் நாம் எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.
பணத்திற்கு விலை போகும் அரசியல் சூது விளையாட்டுக்களில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு நாம் தயாராக இல்லை. மக்கள் ஆணைக்கு மாத்திரமே நாம் மதிப்பளிப்போம் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
செவ்வாய்கிழமை (18) விசேட அறிவித்தலொன்றை விடுத்து இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உண்மைகளை பொய்களாக்குவதற்கும் , பொய்களை உண்மைகளாக்குவதற்கும் பாரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பணம் மற்றும் சிறப்புரிமைகளை இலக்காகக் கொண்டவர்கள் இதற்கு துணை நிற்கின்றனர்.
இவ்வாறானவர்களுடன் தேசிய அரசாங்கம் தொடர்பில் நான் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. எமது கட்சியும் அவ்வாறு எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவுமில்லை.
பிரதமர் பதவி தொடர்பிலோ , அமைச்சுப்பதவிகள் தொடர்பிலோ தற்போதைய அரசாங்கத்துடன் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
போலி பிரசாரங்கள் ஊடாக மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. போலி பிரசாரங்களை ஊடகங்கள் ஊடாக முன்னெடுத்தமையின் காரணமாகவே பொய் வெற்றி பெற்று 2019இல் நாட்டை அழிப்பதற்கான அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியுடன் நாம் ஒருபோதும் தேசிய அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை. பதவிகளையும் ஏற்கப் போவதில்லை. பணத்திற்கு விலை போகும் அரசியல் சூதில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது.
தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது. முடிந்தால் மிகக் குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுக்கின்றேன்.
அவ்வாறில்லை எனில் நீங்கள் நிதி ஒதுக்க தயங்கும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலையாவது நடத்துங்கள். அதன் ஊடாக மக்கள் ஆணை யாரிடமுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அரசாங்கம் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை செய்யுமாயின் அவற்றுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். ஆனால் அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கைகளை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.
எந்தவொரு காரணத்திற்காகவும் தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு நாம் தயாராக இல்லை. மக்கள் ஆணைக்கு மாத்திரமே நாம் மதிப்பளிப்போம்.
அது வரையில் இந்த அரசியல் சூது விளையாட்டுக்களை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். 2000 இலட்சத்திற்கு விலை போகும் பாராளுமன்ற உறுப்பினர் எம்மில் இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM