ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நான்காண்டு நிறைவு : நாட்டு மக்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் - காவிந்த

Published By: P. Saranya

18 Apr, 2023 | 05:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள பின்னணியில் இதுவரை உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

உண்மையை பகிரங்கப்படுத்த அரசியல் நோக்கமற்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் நாளை மறுதினம் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பயங்கரமானது. சட்டமூல வரைபு தொடர்பில் அரசாங்கத்துக்குள் கடும் எதிர்ப்பு தோற்றம் பெற்றுள்ளது.

சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்கி ஆட்சியை கைப்பற்றிய பொதுஜன பெரமுன தற்போது குண்டு தாக்குதல் சம்பவத்தை மறந்து விட்டது.குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன.

குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நாளை மறுதினத்துடன் (வியாழக்கிழமை) நான்கு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது.

உண்மையை கண்டறிவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் நோக்கமற்ற வகையில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17