(இராஜதுரை ஹஷான்)
தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெர முனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் ஏனெனில் நாங்களே ஜனாதிபதியை தெரிவு செய்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.குறுகிய காலத்திற்குள் நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.
நெருக்கடியான நேரத்தில் சவால்களை பொறுப்பேற்காத தரப்பினர் தற்போது அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என குறிப்பிடுகிறார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் ஸ்திரமான தன்மையில் காணப்பட வேண்டும்.சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்துவார்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்த போது எவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையவில்லை.
நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் தற்போது அரசாங்கத்துடன் இணைய எதிர்தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.
தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM