கிளிநொச்சியில் 14 பேருக்கு டெங்கு

Published By: Raam

11 Jan, 2017 | 09:07 AM
image

கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல்  வேகமாக பரவிவருவதாகவும், கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் 14  பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிாிவினா் தெரிவித்துள்ளனா்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறு, உயிர்கொல்லி  டெங்கு நோயிலில் இருந்து  பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்,காய்ச்சல் இரண்டு நாட்களிற்கு மேல் நீடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை  மேற்கொள்ளுமாறும்,மாவட்டத்திலுள்ள கர்ப்பவதிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை சென்று சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது.  கடந்த வருடம் வரை டெங்கு  நோய் அற்ற மாவட்டமாக கிளிநொச்சி காணப்பட்டு வந்தது.ஆனால் தற்போது  2017 ஆம் வருடத்தின் முதல் ஏழு நாட்களில்  கிராஞ்சி, சிவபுரம், மலையாளபுரம், அம்பாள்குளம், கணேசபுரம்,  வலைப்பாடு, கல்மடு, செல்வாநகர் மற்றும் விசுவமடு ஆகிய, இடங்களிலிருந்து 14 போ்  டெங்குக்காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட வைத்தியசாலையினா் தெரிவித்துள்ளனா்.

எனவே வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும்  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனம் கண்டு முற்றாக அழித்தொழிக்குமாறு சுகாதார பிரிவினா் அவசர அறிவித்தலை விடுத்துள்ளனா்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21