ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இடம்பெற்ற இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,   சுமார் 45 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் பாராளுமன்றம் அருகே தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற, சிறிது நேரத்தில் மற்றொரு தற்கொலை குண்டுதாரி வாகனத்தில் பொருத்தப்பட்ட  குண்டை வெடிக்கச் செய்துள்ளார். 

குறித்த இரட்டைத் தற்கொலை தாக்குதலில் பாராளுமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 21 பேர் பலியானதாகவும், 45 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக தலிபான் அமைப்பின் பேச்சாளர் சைபுல்லா முஜாய்ட் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.