ப்ரபாத் ஜயசூரிய சிறந்த பந்துவீச்சு பெறுதி ; இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி அயர்லாந்து

Published By: Vishnu

18 Apr, 2023 | 12:53 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகவும் இலகுவான இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இலங்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.

போட்டியின் 3ஆம் நாளான இன்றைய தினம் பகல் போசன இடைவேளையின்போது அயர்லாந்து தனது பலோ ஒன்னில் 5 விக்கெட்களை இழந்து 41 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, நால்வர் குவித்த சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 591 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அயர்லாந்து கடைசி 3 விக்கெட்களை 26 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த லோர்க்கன் டக்கர் 3ஆம் நாள் காலை திறமையாகத் துடுப்பெடுத்தாடி 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 143 ஓட்டங்களாக இருந்தபோது அயர்லாந்தின் கடைசி 3 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன.

இலங்கை பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார். விஷ்வா பெர்னாண்டோ 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அயர்லாந்து பகல்போசனத்திற்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது 5 விக்கெட்களை இழந்து 41 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

ஹெரி டெக்டர் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் ரமேஷ் மெண்டிஸ் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49