ஒமிக்ரோனின் புதிய வகை தொற்று: இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் அச்சம் அதிகரிப்பு

Published By: Rajeeban

18 Apr, 2023 | 09:43 AM
image

ஒமிக்ரோனின் எக்ஸ்பிபி1.16 எனப்படும் ஆர்க்டரஸ் திரிபு இந்தியாவில் வேகமாக பரவி வருவது அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்த வகை கொரோனா  வைரஸ் மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊடுருவும் தன்மைகொண்டது என்பதால் வரவிருக்கும் நான்கு வாரங்கள் அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமான காலக்கட்டம் என உலகெங்கிலும் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியமத்திய சுகாதார அமைச்சக நேற்று காலை நிலவரப்படி 9111 பேர் எக்ஸ்பிபி 1.16 வகை கொரோனா  பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்துகொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60313-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்க 27 பேர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 531141-ஆக அதிகரித்துள்ளது. 

பிஏ2.10.1 மற்றும் பிஏ.2.75 ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திரிபாகவே எக்ஸ்பிபி1.16 அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹச்ஓ) தெரிவித்துள்ளது.

இந்த ஆர்க்டரஸ் வகை மிகவும் கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரியவில்லை என்பதேஉலகசுகாதார ஸ்தாபனத்தின்   நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இந்த புதிய வகை கொரோனா  வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருக்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் பாதிப்பு விகிதம் என்பது மிக அதிகமாக உள்ளது.

தற்போது கொரோனா  தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் பீதியடையத் தேவையில்லை. ஆனால் வயதானவர்களும் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானவர்களும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் என்ன?

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி குழந்தைகளிடம் இந்தவகை ஆர்க்டரஸ் வகை கொரோனா  வைரஸ் தொற்று ஏற்பட்டால் கண்கள் இளஞ் சிவப்பு நிறமாதல் தலைவலி தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். பெரியவர்கள் ஆர்க்டரஸ் பாதிப்புக்கு ஆளானால்இதொண்டை புண் வாசனை இழப்பு கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி இருமல் மூக்கிலிருந்து சளி வெளியேறுதல் உள்ளிட்டவை அறிகுறிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46
news-image

ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்துவதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு...

2024-04-14 09:45:24
news-image

முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசரசந்திப்பு

2024-04-14 07:18:26
news-image

ஈரான் தாக்குதல் - இஸ்ரேலின் தென்பகுதி...

2024-04-14 07:24:52
news-image

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானதாக்குதல்கள் ஏவுகணை...

2024-04-14 06:48:31
news-image

தாயையும் குழந்தையையும் வாள்போன்ற ஆயுதத்தினால் தாக்கிய...

2024-04-13 15:35:05
news-image

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல்...

2024-04-13 13:58:26
news-image

மனிதாபிமான பணியாளர்களிற்கு தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படும்...

2024-04-13 11:38:23
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய...

2024-04-12 21:26:07
news-image

100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ்...

2024-04-12 20:28:07