ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்புக்கு அழைப்பு

Published By: Digital Desk 3

17 Apr, 2023 | 04:26 PM
image

பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இன்று (17) யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் தமிழ் கட்சிகளுக்கிடையில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக...

2026-07-15 09:44:34
news-image

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு...

2026-07-15 09:04:38
news-image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்...

2026-07-15 09:01:45
news-image

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்...

2026-07-15 08:55:48
news-image

இன்றைய வானிலை 

2026-07-15 06:53:39
news-image

யாழ். கல்வி அபிவிருத்தி உப குழுக்...

2026-07-15 06:52:10
news-image

சலே தாக்கல் செய்த ரிட் மனு:...

2026-07-15 06:47:42
news-image

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள்...

2026-07-15 06:41:21
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பலனின்றி...

2026-07-15 06:38:11
news-image

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின்...

2026-07-15 06:33:05
news-image

‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் மறைவு:...

2026-07-15 06:29:29
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: சிறை அதிகாரிக்கு...

2026-07-15 06:22:49