திருமாவளவன் வெளியிட்ட 'ஏ படம்' திரைப்படத்தின் முன்னோட்டம்

Published By: Nanthini

17 Apr, 2023 | 04:27 PM
image

றிமுக நடிகர் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஏ படம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் 'கேஸ்ட்லெஸ்' சிவா கோ இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'ஏ படம்'. இதில் ராஜ கணபதி அம்பேத்கர் வேடத்தில் நடித்திருக்கிறார். 

எம்.சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்திருக்கிறார். 

சமூக நீதி குறித்த புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துக்களை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை மாங்காடு அம்மன் மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் ராஜ கணபதி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன், அக்கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு, இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான தர்மசீலன் செந்தூரன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். 

இப்படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், 

''புரட்சியாளர் அம்பேத்கர், எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோரின் கருத்துக்களை முன்வைத்து இப்படத்தினை உருவாக்கி இருக்கிறேன். இதற்கு தணிக்கை துறையினர் ஒப்புதல் அளிக்கவில்லை. 

மறு தணிக்கை, நடிகை கௌதமியின் தலைமையில் நடைபெற்றது. அதன்போது 44 இடங்களில் வசனங்களையும் காட்சிகளையும் குறியீடுகளையும் நீக்க வேண்டும் என குறிப்பிட்டனர். இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.  

நீதிமன்றத்தின் கதவுகளை தட்டவிருக்கிறோம். விரைவில் எங்களுக்கும் உரிய நீதி கிடைக்கும் என நம்புகிறோம். சனாதன சக்திகளுக்கு எதிரான இந்தத் திரைப்படம் சமூகத்தில் பெரிய அதிர்வையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right