ரணிலே இவ்வருட புத்தாண்டு ஆணழகன்! - ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரங்கே பண்டார

Published By: Nanthini

17 Apr, 2023 | 03:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்) 

3 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மக்கள் தமிழ் - சிங்கள புத்தாண்டை இம்முறை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றதனாலே அது சாத்தியமாகியது. அதனால் இந்த வருட புத்தாண்டு ஆணழகன் ரணில் விக்ரமசிங்க ஆவார்.

அத்துடன், இந்த அரசாங்கத்துக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதன் மூலம் அவர் நாட்டு மக்களுக்கான நிவாரண பணிகளை மறுக்கிறார் என ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

தமிழ் - சிங்கள புத்தாண்டை இலங்கை மக்கள் 3 வருடங்களுக்கு பின்னரே சந்தோஷமான முறையில் கொண்டாட முடியுமான சூழல் ஏற்பட்டிருந்தது. 

கடந்த 3 வருடங்களாக கொவிட் தொற்று மற்றும் ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை இருந்தது. என்றாலும், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமையால் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை ஓரளவேனும் கட்டியெழுப்ப முடிந்தமையாலே இது சாத்தியமாகியது.

அத்துடன், வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டிருக்காவிட்டால், இந்த முறையும் தமிழ் - சிங்கள புத்தாண்டை கொண்டாட முடியாமல் போயிருக்கும். அதனால் இந்த வருட புத்தாண்டு ஆணழகன் ரணில் விக்ரமசிங்க ஆவார். 

நாடு வீழ்ச்சியடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பொறுப்பானவர்கள் யாரும் முன்வரவில்லை. ஆனால், ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எந்த நிபந்தனையும் இல்லாமல் நாட்டை பொறுப்பேற்றார்.

மேலும், இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்து வருகிறார். அப்படியானால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். 

குறிப்பாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு, பஸ் கட்டண குறைப்பு, வறிய மக்களுக்கு அரிசி நிவாரணம் போன்ற நடவடிக்கைகளுக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதனால் சஜித் பிரேமதாச இவ்வாறு சிந்திக்காமல் அறிக்கை விடுவதால் அதன் பாதிப்பு அவருக்கே ஏற்படும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13
news-image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே...

2026-01-25 09:19:51