புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை எதிர்ப்பவர்கள் ஜனாதிபதி மீது மாத்திரம் நம்பிக்கை கொண்டுள்ளனரா ? - பாலித ரங்கே பண்டார

Published By: Digital Desk 5

17 Apr, 2023 | 12:07 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதிபொலிஸ்மா அதிபர்கள் , நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் மீது நம்பிக்கை அற்றவர்களே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர்.

அவ்வாறானவர்கள்  தமக்கு இந்த சட்ட மூலம் வேண்டாம்  என்றும் , தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மாத்திரமே நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான புரிதல் அற்றவர்களே அதனை எதிர்க்கின்றனர். பயங்கரவாத ஒழிப்பு சட்ட மூலம் 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சட்ட மூலத்தில் பல தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

தடுப்புக்காவலில் வைப்பதற்கான அதிகாரம் இதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் மாத்திரமே காணப்பட்டது. எனினும் புதிய சட்ட மூலத்தின் ஊடாக அந்த அதிகாரம் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் , நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர்கள் , நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் மீது நம்பிக்கை அற்றவர்களே இதனை எதிர்க்கின்றனர்.

அவ்வாறெனில் அவர்கள் ஜனாதிபதியிடம் மாத்திரம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமையை விரும்புகின்றனரா? ஜனாதிபதியின் மீது மாத்திரமே தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறுபவர்கள் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் அதனை குறிப்பிட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:37:37
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06
news-image

சர்ச்சையை ஏற்படுத்திய மகா சங்கத்தினரின் கடிதம்...

2026-08-12 14:28:29
news-image

சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு:...

2026-08-12 14:07:12
news-image

2022 இல் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதித்...

2026-08-12 13:51:34