(எம்.வை.எம்.சியாம்)
நாட்டை நெருக்கடிக்களுக்குள் தள்ளிய ஊழல்வாதிகள் எவ்வித இலக்கும், திட்டமும் இன்றி தற்போது விடயங்களை முன்னெடுக்கின்றனர்.
குரங்குகளை விற்று அன்றைய நாளை மாத்திரம் சமாளிப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கம் எதிர்காலத்தில் பாம்புகளையும், யானைகளையும் விற்பனை செய்யும் என அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
திருகோணமலையில் 15 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டை பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டு தற்போது கடனை கழிப்பதாக கூறி கொண்டு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இதேவேளை முறிகளிலிருந்து 15 வீதத்தினை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் ரணில்-ராஜபக்ஸக்கள் முன்னெடுக்கும் அழிவை நிறுத்துவதற்காக நாட்டின் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு பயணிப்போம்.
தற்போது நாட்டின் சுற்றுச்சூழலையும் இந்த அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிக்கிறது. குரங்குடன் நிறுத்தமாட்டார்கள்.
யானைகளையும் விற்பனை செய்வார்கள். நாட்டை இந்த நிலமைக்கு கொண்டு சென்று ஊழல்வாதிகள் எவ்வித இலக்கும் திட்டமும் இல்லாமல் விடயங்களையே முன்னெடுக்கின்றனர். இதனை இவர்கள் நிறுத்த வேண்டும்.
குரங்குகளை விற்று அன்றைய நாளை மாத்திரம் சமாளிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. பின்னர் பாம்புகளை விற்பனை செய்வார்கள். யானைகளையும் விற்பனை செய்வார்கள். இதுவே இவர்களின் திட்டம். இது என்ன இலக்கு? என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM