வவுனியா- புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

Published By: Vishnu

17 Apr, 2023 | 09:04 AM
image

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் (15) சனிக்கிழமை இரவு (15.04) புளியங்குளம், புதூர் பகுதியில் உள்ள தனது வயல் காவலுக்கு சென்றுள்ளார்.

இன்று (16.04) காலை விடிந்தும் குறித்த இளைஞர் வீடு திரும்பாமையால் அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞரைத் தேடிச்சென்ற போது வயற் பகுதியில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என்பவராவார்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞனின் மூத்த சகோதரர் புதூர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் உழவு இயந்திரத்தில் கடக்கின்ற போது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு புகையிரதத்தில் உழவு இயந்திரம் மோதி அவரது நண்பருடன் மரணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41