(எம்.வை.எம்.சியாம்)
காலி, நெலுவ பிரதேசத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இரண்டரை வயது சிறுவனின் சடலம் நீரோடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நெலுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெலுவ பிரதேசத்தில் நேற்று (15) சனிக்கிழமை மாலை காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இரண்டரை வயது குழந்தையின் சடலம் வீட்டின் அருகில் உள்ள நீரோடையில் இருந்து இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம, தர்கா நகரைச் சேர்ந்த குறித்த சிறுவன் தந்தையுடன் தனது பாட்டியின் வீட்டுக்கு சென்றிருந்தபோதே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் மற்றும் நூற்றுக்கணக்கான பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும், குறித்த சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர், குழந்தையை யாரோ கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும், இன்று வீட்டின் அருகே உள்ள நீரோடையில் சோதனை செய்தபோது அதிலிருந்து உயிரிழந்த நிலையில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெலுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM