(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார மீட்சிக்காக இலங்கை எடுத்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சிக்குரியது.
சமூக கட்டமைப்பில் அவதானத்துக்குரிய தரப்பினரை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புக்கள் வெற்றி பெற வேண்டுமாயின், வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என உலக வங்கிக்கான தென்னாசிய தலைவர் மார்டின் ரேஸர், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வொஷிங்டன் நகரில் இடம்பெறும் ஸ்ப்ரிங் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் தொடர்பில் உலக வங்கிக்கான தென்னாசிய தலைவர் மார்ட்டின் ரேஸர் ட்விட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
இலங்கையின் நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களின் முன்னேற்றத்தன்மை மகிழ்ச்சிக்குரியது. சமூக கட்டமைப்பில் அவதானத்துக்குரிய தரப்பினரை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற வேண்டுமாயின், வெளிப்படைத்தன்மை வெகுவாக பேணப்பட வேண்டும்.
பொருளாதார மீட்சிக்காக உலக வங்கி இலங்கைக்கு ஆலோசனை மற்றும் நிதி ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்கும். புதுப்பிக்கத்தக்க வளங்கள், டிஜிட்டல் மற்றும் கல்வி மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்ப்ரிங் மாநாட்டுக்கு இணையாக உலக வங்கி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கொவிட் பெருந்தொற்று, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. டிஜிட்டல் துறை சார்ந்த கற்கைநெறிகளுக்கு அதிக நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM