மட்டக்களப்பில் கடந்த 10 நாட்களுக்குள் ரயில் விபத்தினால் 3 உயிரிழப்புக்கள் பதிவு 

Published By: Nanthini

15 Apr, 2023 | 03:11 PM
image

ட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று (14) அதிகாலை 1.35 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்தவர்கள் சடலத்தை  கண்டு, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்க, அதன் பின்னர் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு  8.15 மணிக்கு புறப்பட்ட கடுகதி ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த நபர், சத்துரு கொண்டான் பாடசாலை வீதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இராமசாமி ரமேஷ்காந் (44) என்பவரே என அவரது மனைவி மற்றும் சகோதரி அடையாளம் காட்டியுள்ளனர்.

முன்னதாக இம்மாதம் கடந்த 3 மற்றும் 10ஆம் திகதிகளில் இருவர் ரயில் விபத்தில் பலியாகியிருந்த நிலையில், மூன்றாவதாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அதன்படி, கடந்த 10 நாட்களுக்குள் புகையிரத விபத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31