ஐ.எஸ்.  தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 48 தீவிரவாதிகளை தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்பு கொன்றுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின்  அட்டூழியங்களுக்கு எதிராக செயற்படும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அயல் நாடான துருக்கி கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. 

ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக தரை, வான் வழியாக தாக்குதல் நடத்தும் துருக்கி இராணுவம், சிரியாவில் துருக்கியின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஐ.எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நேற்றைய தினம் துருக்கி இராணுவம் நடத்திய தொடர்ச்சியான அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

அத்தோடு அவர்களது முகாம்கள் மற்றும் ஆயுதகளஞ்சியங்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.