'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'வைப்பர்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக்கை, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராசன் இயக்கத்தின் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'வைப்பர்'. இதில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். எழுத்தாளர் ஸ்ரீநிவாசன் சுந்தர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சைக்கோ கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை கிரினேடிவ் பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' திரைக்கதையில் நாயகன் கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் என்பதால் படத்திற்கு ' வைப்பர்' என பெயரிட்டிருக்கிறோம். “வைப்பர் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.
விரைவில் இறுதி கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பான் இந்திய அளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து படத்தை உருவாக்கி வருகிறோம்'' என்றார்.
இதனிடையே இப்படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை ரோஷினி பிரகாஷ் மிஸ் ஃபெமினா பட்டத்தை வென்றவர் என்பதும், இயக்குநர் பாலா இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM