யாழில் மீண்டும் கொரோனா தொற்று ! 

14 Apr, 2023 | 10:08 AM
image

யாழ். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அப்பெண்ணுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது , எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து அப்பெண்ணை விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

கொரோனா தொற்று குறைவடைந்தமையை அடுத்து , வைத்தியசாலைகளில் இருந்த தனிமைப்படுத்தல் விடுதிகள் அகற்றப்பட்டுள்ளமையால் , குறித்த பெண்ணை சாதாரண விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை குறித்த பெண் வேறு தொற்றா நோய்களுக்கு உள்ளாகி உள்ளார். அதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. அவர் கொரோனா தடுப்பு ஊசிகள் போட்டுக்கொண்ட போதிலும் , உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம். 

அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லவும் , கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51
news-image

செப். 25 முதல் ஒக். 1...

2026-09-15 19:06:41
news-image

தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் நிலவும்...

2026-09-15 19:04:43
news-image

நாடு ஒரு புதிய அரசியல் கலாசாரத்துடன்...

2026-09-15 19:01:48
news-image

செப்டம்பர் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

2026-09-15 18:33:27