ஆபாச வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் கிம் கதர்ஷியனுடன் ட்ரம்ப் மனைவி

10 Jan, 2017 | 11:19 AM
image

ஆபாச வலைத்தளம் ஒன்றில் கடந்த ஆண்டு மிக அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மொடல் அழகி கிம் கதர்ஷி யன் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள  ட்ரம்பின் மனைவி மெலானியா 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மிக பிரபலமான ஆபாச வலைத்தளம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களால் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் அல் லது காட்சிகள் எதுவும் இணையத்தில் பதிவேற்றப்பட் டுள்ளனவா என்ற தேடலின் ஒருபகுதியாக குறித்த வலைத்தளம் இந்த பிரபலங்களின் பெயர்களை பட்டிய லிட்டுள்ளது.

இதில் அமெரிக்க மொடல் அழகியும் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆபாச காணொளி ஒன்று வெளியான பின்னர் மிகவும் பிரபல்யமானவருமான கிம் கதர்ஷியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த பட்டியலில் கதர்ஷியன் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் பெரும்பாலான வர்கள் அதிகம் வலைத்தளத்தில் தேடியது தெரிய வந்துள்ளது.

அந்த பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பிரபலங்கள் இவர்கள் தான்.

கிம் கதர்ஷியன் (வயது –36), கைலி ஜென்னர் (வயது–19), ஏஞ்சலினா ஜோலி (வயது–41), டொனால்ட் டிரம்ப் (வயது–70), பியான்ஸ் (வயது–35),  அலிசியா மசாடோ (வயது–40), கோல் கதர்ஷியன் (வயது–32), மெலானியா டிரம்ப் (வயது–46), மேகன் மார்கில் (வயது–35), கோர்ட்னி கதர்ஷியன் (வயது–37). 25 பேர் கொண்ட அந்த பட்டியலில் டிரம்பின் மகள் இவாங்கா, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ஹிலாரி கிளின்டன், போரிஸ் ஜொன்சன் உள்ளிட்ட பிரபலங்களும் தேடப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right