லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கக்கலை, கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (13) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 10 பெண் தொழிளாலர்களும் ஒரு கங்காணியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளன.
மேலும் தேயிலை தோட்டத்தில் வேலையில் ஈடுபடும் பலரும் தொடர்ச்சியாக இவ்வாறு பாதிக்கப்படுவதாகவும் உரிய அதிகாரிகள் இவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறித்த பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM