மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் கனேடியத் தமிழர்களால் நன்கொடை !

13 Apr, 2023 | 03:00 PM
image

கனேடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

கடந்த ஆண்டு கனேடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress - CTC) ஒழுங்கு செய்யப்பட்ட நிதிசேர் நடையூடாக திரட்டப்பட்ட நிதியின் இரண்டாவது நன்கொடை இதுவாகும்.

கடந்த ஆண்டு முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. 

கனேடியத் தமிழர் பேரவை தமது வருடாந்த நிதிசேர் நடையூடாக வருடந்தோறும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது.

இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவால் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன. 

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு கனேடியத் தமிழர் பேரவையினரால் பதினான்காவது வருடாந்த தமிழ்க் கனேடிய நிதிசேர் நடையூடாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்குவதெனத் திட்டமிடப்பட்டது.

இந்த நன்கொடையின் இரண்டாம் கட்டமாக கனடியத்  தமிழர் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டாம் தொகுதி மருந்துப் பொருட்கள் 12 ஆம் திகதி புதன்கிழமை 2:30 மணிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலை இயக்குனர் மருத்துவர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த மருந்து பொறுப்பேற்றல் நிகழ்வில் கனடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதி மற்றும் மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் இதுரைரத்தினம் துசியந்தன்,  புற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஏ. இக்பால், நோயியல் நிபுணர் மருத்துவர்  அகிலன் சின்னத்துரை மற்றும்  பல மருத்துவ நிபுணர்கள்,  மருத்துவமனை நிர்வாக பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.

எதிர்வரும் மாதங்களில்  ஏனைய மருத்துவமனைகளுக்குமான நன்கெடைகள் திட்டமிட்டபடி கனடிய தமிழர் பேரவையினால்  ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46