ஒவ்வாமையால் ஏற்படும் நோய்கள்

Published By: Robert

10 Jan, 2017 | 11:19 AM
image

உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்களை பயன்படுத்துவது, பிடிக்காத வாசனையை நுகர்வது, செல்லபிராணிகளை கொஞ்சுவது போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படலாம்.

ஒவ்வாமையால் பல நோய்கள் வரலாம். அவற்றிற்கு காரணம் என்ன? என்பதை முறையாக கண்டு பிடித்து உரிய சிகிச்சை அளித்தால் தான் நோய் குணமாகும். ஆயுர்வேதத்தில் இந்நோயினை பீனஸம், பிரதிச்யாயம் என அழைப்பார்கள்.

நாம் சுவாசிக்கும் போது ஒவ்வாமையை ஏற்படுத்தும். தூசு, மகரந்தம் போன்றவை மூக்கில் ஏறி தும்மலை ஏற்படுத்தும். சில நேரங்களில் உணவின் நறுமணமும் இதனை ஏற்படுத்தும் மகரந்த துகள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் ஒவ்வாமைக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. ஒவ்வாமையை தூண்டும் பொருட்களை அலர்ஜென் என்று கூறுவார்கள். சிலருக்கு பெயிண்ட் வாசனையால் ஒவ்வாமை ஏற்படும். செடி, கொடிகளின் மகரந்தம் காற்றில் பறந்து போகும் போது கூட ஒவ்வாமை ஏற்படும்.

சூடான வரண்ட காற்று உள்ள நாட்களில் மகரந்தம் அதிகமாக இருக்கும். குளிர்காலத் திலும், மழை பெய்யும் நாட்களிலும் மகரந்தம் அதிகமாக இருக்காது.

இது தவிர பரம்பரையாகவும் சிலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். தாய் அல்லது தந்தைக்கு ஒவ்வாமை இருந்தால் அது குழந்தைகளுக்கும் வரலாம்.

நோயின் பாதிப்பு:

ஒவ்வாமை ஏற்படும் போது மூக்கில் அரிப்பு ஏற்படும். முகம், வாய், கண், தொண்டை, தோல் ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும். எந்த வாசனையையும் முகர்ந்து பார்க்க முடியாது. தும்மல் ஏற்பட்டு கண்ணில் இருந்து தண்ணீர் வரும். பின்னர் மூக்கு, காது அடைபடும். இருமலும் வரும். தொண்டை கரகரப்பு ஏற்படும். தொடர்ந்து அசதியும், தலைவலியும் இருக்கும்.

சில நேரங்களில் மருத்துவர்கள் ஈஸ்நோபிலியா அதிகரித்து உள்ளதா? என்பதையும், ஐ.ஜி.இ. அளவையும் சோதிப்பார்கள். நாசல் வாஷ் செய்து கொள்வது இதற்கு மிகவும் சிறந்ததாகும். உப்பு நீரால் இதை செய்யலாம். கடையிலும் இதற்கான மருந்துகள் கிடைக்கும்.

ஒவ்வாமைக்கு தீர்வு:

நாசல் வாஷ் செய்ய ஒரு கோப்பை சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பும், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவும் கலந்து இதனை செய்யலாம். ஒவ்வா மைக்கு ஆன்டி ஹிஸ்டமைன் என்ற மருந்தை நவீன மருத்துவர்கள் பரிந்துரைப் பார்கள். இந்த மருந்தை பயன்படுத்தும் போது சிலருக்கு சற்று தூக்கம் வரும். எனவே இந்த மருந்தை பயன் படுத்து வோர் வாகனங் களை இயக் கவோ, எந்திர வேலைகள் செய்யவோ கூடாது என்பது அறிவுரையாகும்.

இப் போது ஒவ்வா மையை தவிர்க்க மூக்கில் அடித்துக் கொள்ளும் ஸ்பிரே கூட வந்து விட்டது. ஒவ்வாமை இருக்கும் போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்து வரை சந்தித்த பின்பே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நவீன மருத்துவத்தில் மூக்கு வளைந்திருக்கிறது என்று சொல்லி அதற்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை எடுக்கச்சொல்கிறார்கள். அதில் குறை இருந்தால் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைக்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்த பின்பும் மூக்கில் சளியும், தும்மலும் குறையாமல் இருப்பவர்கள் பலர் உள்ளனர்.

மூக்கு இருந்தால் ஜலதோசம் வருவது இயற்கை. ஜலதோசத்தை தீர்க்க முயற்சிப்பதை விட மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதே முக்கியமானதாகும்.

ஒவ்வாமை எனப்படும் பீனஸ நோய்க்கு காரணங்களாக ஆயுர்வேதத்தில் சொல்லப் படுபவைகள் பின்வறுமாறு:

ஒரு மனிதனின் ஆதிபலமா கிய அக்னி எனும் செரிக்கும் தன்மை யின் பலம் குறைவது முதல் காரணமாகும். 2-வது மல, மூத்திரத்தை தொடர்ந்து அடக்குவ தாலும் இந்நோய் ஏற்படும். 3-வது நோய் எதிர்ப்பு தன்மை தொடர்ந்து குறைந்து வருவது, 4-வது ஒவ்வாமையால் வருவதாகும்.

எளிமையான கை மருந்து :

லவங்கப் பட்டையை நன்றாகப் பொடித்துப் புளிச்சாற்றிலோ, தண்ணீரிலோ குழைத்து, சற்றுச் சூடாக்கித் தலையிலும் மூக்கைச் சுற்றிலும் போட்டு வந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சிறிய அளவு படிகாரம் ஆகியவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை ஒரு துணியில் சிறிய முடிச்சாகக் கட்டி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு, அரிப்பு போன்றவை மாறும்.

புதினா இலைச்சாறு, எலுமிச்சைச்சாறு, ஆரஞ்சு சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு உருவாகித் தும்மல் வருவது குறையும்.

சிற்றகத்தி இலை, வெள் வெங்காயம், சீரகம், கருஞ்சீரகம், மிளகு, பால் சாம்பிராணி ஆகியவற்றை நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் ஜலதோசம் வராது. இத்துடன் நொச்சியிலைச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.

உணவில் மணலிக்கீரை சேர்த்து கொள்ளலாம். அடிக்கடி மிளகு ரசம் வைத்து குடிக்கலாம். பூண்டு ஜூஸ் குடிப்பதும் நல்லது. சூடான பாலில் மஞ்சல் பொடி சேர்த்துக் குடிப்பது உடலுக்கு நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றைக் கஷாயமாக்கிப் பனங்கற்கண்டு சேர்த்தும் கடிக்கலாம்.

வெள்ளைப்பூண்டு குழம்பு வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். பால் சேர்க்காத காப்பி குடிப்பது நல்லது.

நோய் தடுக்கும் நெல்லிக்காய் லேகியம் :

நோயை தணிக்க கார்ப்பு சுவையுடைய சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சிற்றரத்தை, தாளிசபத்திரி போன்ற சூரணங்கள், இந்துகாந்தநெய் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

நீர்க்கோவை என்ற பிரசித்தி பெற்ற மாத்திரையை இஞ்சி சாற்றிலோ, துளசி சாற்றிலோ அரைத்து மூக்கைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும். மீண்டும் நோய் வராமல் இருக்க நெல்லிக்காய் லேகியத்தைக் கொடுக்க வேண்டும்.

உடனடி நிவாரணத்துக்கு லெஷ்மி விலாஸ ரசம், சுதர்ஸன சூரணம், துளசி கஷாயம் போன்றவை சிறந்த பலனை அளிக்கும்.

நோயிலிருந்து விடுபட பிறகு மேலும் நோய் வராமல் இருப்பதற்கு நொச்சி தைலத்தை தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04