நடிகர் மாதவன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு, 'டெஸ்ட்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டது.
தயாரிப்பாளரான சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் முதல் திரைப்படம் 'டெஸ்ட்' இதில் நடிகர்கள் மாதவன், சித்தார்த் கதையின் நாயகர்களாகவும், நடிகை நயன்தாரா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்கள்.
ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
மே மாதம் முதல் வாரம் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'டெஸ்ட்' எனும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் மாதவன் இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில் வெளியான 'பிரியமான தோழி' திரைப்படத்தின் துடுப்பாட்ட வீரராக நடித்திருந்தார். அதன் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து துடுப்பாட்டத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அவர் துடுப்பாட்ட வீரராக நடிக்கிறாரா? அல்லது பயிற்சியாளராக நடிக்கிறாரா? அல்லது நடுவராக நடிக்கிறாரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM