இலங்கையில் காணப்படும் சில வகை குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் குழுவொன்றை நியமித்தமை குறித்து சூழல் விவகாரங்களிற்கான சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் மாத்திரம் சில வகை குரங்குகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வகை குரங்குகளே பயிர்ச்செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால் இது குறித்த தீர்மானங்களை விஞ்ஞான அடிப்படையில் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பயிர்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக குரங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது என்ற முடிவை சாதாரணமாக எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்படும் சீனாவில் அவைகளிற்கு உகந்த காலநிலை காணப்படுமா? போன்ற விடயங்கள் குறித்து முதலில் ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உயிரியல் பூங்காவிற்கு கூட ஏன் இவ்வளவு பெருந்தொகை குரங்குகள் தேவை என்ற கேள்வி எழுந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் தற்போதைய சட்டப்படி சூழல் பாதுகாப்பு நோக்கங்களிற்காக மாத்திரம் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாமிசத்திற்காக குரங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஏற்றுமதி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM