இலங்கை கால்பந்தாட்ட அணி இரண்டு போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஆடவர் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும், கட்ாரில் நடைபெறவுள்ள 23 வயதுக்குட்பட்ட ஆசியக் கால்பந்தாட்ட தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடையாது என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கான கடிதத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை, கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருந்துள்ளதாக தெரிவித்தே, இந்த தடை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM