இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணி தனது போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் விளையாடுவதற்கு விரும்பும் என இந்தியாவின் பிரிஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி இவ்விரு நகரங்களில் விளையாடியபோது பாதுகாப்பாக உணர்ந்ததாக கூறப்படுகிறது.
ஆண்களுக்கான ஒருநாள் உலகக்கிண்ண சுற்றுப்போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அஹமதாபாத், லக்னோ, மும்பை, சென்னை, கொல்கத்தா, ராஜ்கொட், பெங்களூரு, டெல்லி, இந்தூர், குவாஹெட்டி, ஐதராபாத், தர்மசாலா ஆகிய 12 நகரங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பிரமுகர்களுக்கும் ஐசிசி பிரமுகர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
"இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் இந்திய அரசாங்கத்தின் தீர்மானத்திலேயே அதிகமானவை தங்கியுள்ளன. ஆனால், பாகிஸ்தான் அணி தனது பெரும்பலான போட்டிகளை கொல்கத்தா, சென்னையில் விளையாட வாய்ப்புள்ளது" என ஐசிசியுடன் தொடர்புடைய வட்டாரமொன்று தெரிவித்ததாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது
"2016 ஆம் ஆண்டு இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றியது. அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு விசேடமானதாக உள்ளது" என அவ்வட்டாரம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM