இளைஞர் ஒரு­வரை கடு­மை­யாக தாக்கி மரணத்தை ஏற்படுத் தியமை மேலும் நான்கு இளை­ஞர்­களை தாக்கி காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பான வழக்கில் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும்  4 பொலிஸ் கான்ஸ்­ட­பல்­க­ளுக்கு பதுளை மேல்­நீ­தி­மன்றம் மரண தண்­டனை விதித்து தீர்ப்பு வழங்­கி­யது. 2014 மே 7 ஆம் திகதி காலப்­ப­கு­தியில் மீக­ஹ­கி­யுல கொஸ்பாம் ஹிங்­கு­ரு­க­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த பெரும்­ஹே­வகே சத்துன் மாலிங்க என்­ப­வரை தாக்கி கொலை செய்தமை மற்றும் நான்கு பேரை தாக்கி காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக பதுளை மேல் நீதி­மன்­றத்தில் விசா­ரிக்­கப்­பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

Image result for மரணதண்டனை

கந்­த­கெட்­டிய பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த உதவி பொலிஸ் பரி­சோ­தகர் ஆர்.எம்.ஜி.சோம­ரத்ன, பி.டி. குமா­ர­க­மகே, எஸ்.எம்.ஆர். புஸ்­ப­கு­மார, பி.எம்.கிரேஸன் அபே­ரட்ண, டி.எம். விஜ­ய­ரட்ரை பொலிஸ் உத­வி­யாளர், சிவில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் எஸ்.எம். ஜய­சுந்­தர ஆகி­யோ­ருக்கே மரண தண்­டனை அழிக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

சுமார் 52 பக்கம் கொண்ட அறிக்­கையை வாசித்த பின் நீதி­பதி ரொஹான் ஜய­வர்த்­தன மேற்­படி தீர்ப்பை வழங்­கினார்.

கொலை செய்யப்பட்ட நபரும் மற்றும் நால்­வரும் போகா­லந்த பகு­திக்கு முச்­சக்­கர வண்­டி­யொன்றை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக சென்­றி­ருந்­த­வர்கள். ஆனாலும் அங்குச் சென்ற பொலிசார் மேற்­படி ஐவரும் சட்ட விரோ­த­மான முறையில் புதையல் தோன்ற முட்­பட்­ட­தாக கூறி மேற்­படி ஐவ­ரையும் கைது செய்து கடு­மை­யாக தாக்கி ஒரு­வ­ருக்கு மரணம் சம்­ப­வித்து மற்­றைய நால்­வ­ருக்கு பலத்த காயம் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர் என சாட்­சிகள் மூலம் தெரிய வரு­வ­தாக கூறிய நீதி­பதி எவ்­வித புதையல் தோன்­று­வ­தற்­கான எவ்­வித உப­க­ர­ணங்­க­ளையும் கொண்டு சென்­ற­தாக கூறி எவ்­வித உப­க­ர­ணங்­களும் நீதி­மன்றில் சமர்ப்பிக்க­வில்லை.

மற்றும் தொல்­பொருள் பணிப்­பாளர் நாய­கத்தின் அறிக்­கை­யின்­படி மேற்­படி பிர­தேசம் புதை­பொருள் உள்ள பிர­தேசம் அல்ல எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த நபர் தாக்­கப்­ப­டும்­போது ஏனைய பொலிஸ் கான்ஸ்­ட­பில்கள் எவரும் அவரைக் காப்­பாற்ற எவ்­வித முயற்­சிகளும் செய்­ய­வில்லை எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

பதுளை நீதி­மன்ற சட்ட வைத்­திய அதி­காரி தமது அறிக்­கையில் மேற்­படி உயி­ரி­ழந்த நபர் தடி­யினால் தாக்­கப்­பட்­ட­மை­யினால் அவ­ரது இத­யப்­ப­குதி உள்­ளிட்ட பிர­தே­சத்தில் உட்­கா­யங்கள் 8 காணப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­ன­டிப்­ப­டையில் மேற்­படி சம்­ப­வத்­துடன் தொடர்­பான பொலிஸ் கான்ஸ்­ட­பில்­க­ளுக்கு தண்­டனை கோவை 294 படி மரண தண்­டனை விதிப்­ப­தாக தெரி­வித்த நீதி­பதி இறு­தி­யாக மேற்­படி பொலிஸ் கான்ஸ்­ட­பில்­க­ளிடம் ஏதா­வது கூற இருக்­கின்­றதா என வின­வினார். அதற்கு அவர்கள் தாம் ஒவ்­வொ­ரு­வரும் நிர­ப­ரா­திகள் என தெரி­வித்­தனர். அதனைத் தொடர்ந்து நீதி­பதி ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஐயா­யிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்குவதாகவும் தெரிவித்து மேற்படி ஐவருக்கும் மரண தண்டனை விதித்தனர்.