யாழில் கருவாடு விற்பனையின் போது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம்  

Published By: Vishnu

12 Apr, 2023 | 04:58 PM
image

கருவாடு விற்பனை செய்யும் போது உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருவாட்டுக் கடை உரிமையாளர்களுக்கு யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த காலப் பகுதிக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள கருவாட்டு கடைகள் யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர்களினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

அதன் போது, தெருவோரம் தூசுக்கள், மாசுக்களால் மாசடையக்கூடிய வகையில் கருவாடுகள் வைத்திருந்த கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். 

தெருவோரம் கருவாடுகள் வைத்து விற்பனை செய்வதாயின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்வதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. 

அத்துடன் கருவாடுகளை தூசு படியும் வகையிலும், அழுக்கான கறள் படிந்த கம்பிகளிலும் குத்தி தொங்கவிடப்பட்டிருந்த கடை உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.

கருவாடுகள் அனைத்தையும் பொலித்தீனால் மூடி தூசுக்கள் படாதவாறு காட்சிப்படுத்துமாறும் பொது சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டது.

மேற்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டதுடன், கால அவகாசத்தின் பின்னரும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாத வர்த்தகர்களிற்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்களால் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25