(எம்.ஆர்.எம்.வசீம்)
இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வை வழங்குவதே ஜனாதிபதியின் இலக்காகும். அத்துடன் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு அமைக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவை உபகுழு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை செயற்படுத்தி பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொண்டு இலங்கையர்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டி கெளரவத்தை வழங்குவதற்காக பரந்துபட்ட இணக்கப்பாட்டுக்கு வருவது இந்த உப குழுவின் முதற்கட்ட நடவடிக்கையாகும்.
அத்துடன் தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தரத்துக்கு அமைய திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடுவது அமைச்சரவை உபகுழுவின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகும். மேலும் பொறுப்புக்கூறும் செயல்முறையாக உள்நாட்டில் உண்மையை கண்டறியும் பொறிமுறையை அமைப்பது இந்த உபகுழுவின் மூன்றாம் கட்ட நடவடிக்கையாகும்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலக்காக இருப்பது, இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வை வழங்குவதாகும். அதற்காக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை அடைந்துகொள்வதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM