உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை - பெப்ரல்

Published By: Vishnu

12 Apr, 2023 | 04:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது. 

தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைப்பதற்கு தேர்தர் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்தல் இந்த வருடம் இடம்பெறுவதற்கு மிகவும் குறுகிய சந்தர்ப்பமே தற்போது இருக்கிறது.

தேர்தலை நடத்துவதற்கும் அரசாங்கம் எந்த தயாரும் இல்லாத நிலையே காணக்கூடியதாக இருக்கிறது.

அத்துடன் நாட்டின் தேர்தல் சட்டம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகிய எதனையும் கருத்திற்கொள்ளாது அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பதறகான நடவடிக்கையை மேற்கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது. 

அதனால் நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்ற நிலை இருப்பதாகவே  கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது எமக்கு தெரிகிறது.

ஏனெனில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இருக்கிறது. அதற்காக ஆகஸ்ட், பெப்டம்பர் மாதமாகும் போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன.

அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிலையே எமக்கு காணக்கூடியதாக இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15