கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் தனது ஐந்து மாத கர்ப்பிணியான காதலித்து திருமணம் செய்த மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார்.
இச் சம்பவம் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது காயமடைந்த கர்ப்பிணி உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும் இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய கர்ப்பிணி மனைவியின் கணவர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM