பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

Published By: Rajeeban

12 Apr, 2023 | 11:34 AM
image

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்ட் உறுதி செய்துள்ளது.

இது குறித்து இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு தாக்குதல் நடைபெற்றது. உடனடியாக பட்டிண்டா ராணுவ முகாமின் அதிரடி தாக்குதல் குழுக்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அடையாளம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

ராணுவ முகாம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாமின் அனைத்து வாயிற்கதவுகளும் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்குப் பின்னரே மேலதிக விவரங்களை தெரிவிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராணுவ முகாமில் நடந்தது தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. பட்டிண்டா சீனியர் எஸ்.பி. குரானா கூறுகையில், "பஞ்சாப் காவல்துறை பட்டிண்டா ராணுவ முகாமுக்கு வெளியில் தயார் நிலையில் நிற்கிறது. ஆனால் ராணுவத் தரப்பில் உள்ளே நுழைய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி :...

2025-04-24 07:18:18
news-image

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள்...

2025-04-23 16:37:49
news-image

துருக்கியில் பூகம்பம்

2025-04-23 16:12:35
news-image

ரஸ்யாவில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில்...

2025-04-23 14:57:29
news-image

காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3...

2025-04-23 14:52:20
news-image

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளிற்காக மாணவர்களை தடுத்துவைத்திருப்பது...

2025-04-23 14:03:20
news-image

பஹல்கம் பயங்கரம் -மனைவி குழந்தைகள் கண்முன்னே...

2025-04-23 12:54:37
news-image

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்:...

2025-04-22 20:58:16
news-image

உயர்கல்வியில் தலையிடுவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தவேண்டும்...

2025-04-22 12:36:12
news-image

பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு ;  வத்திக்கானுக்கு...

2025-04-22 11:24:51
news-image

இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராக...

2025-04-22 10:52:35
news-image

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்

2025-04-22 09:25:56