தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலை­மன்­னா­ருக்கும் இடை­யே­யான "அனுமன்" பாலம் அமைக்கும் இந்­தி­யாவின் யோச­னையை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­த­தோடு எதிர்ப்­பையும் வெளி­யிட்டுள்ளது.

இப் பாலம் அமைக்கும் திட்­ட­மென்­பது இலங்­கையின் ஆழி­லி­யலை பாதிப்­பது மட்­டு­மல்­லாது உயிரியல் பன்­மு­கத்­தன்­மை­யையும் பாதிப்­ப­டையச் செய்யும் என்றும் அரசாங்கம் நேற்று அறி­வித்­தது.

பெல­வத்­தை­யி­லுள்ள நெடுஞ்­சா­லைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அரசு சார்பில் கருத்து தெரி­வித்த நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல இந்த அறி­விப்பை விடுத்­தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

பிர­தமர் ரணில் ­விக்­கி­ரமசிங்க இந்­தி­யாவின் தமிழ் நாட்டின் தனுஷ்­கோ­டிக்கும் தலை­மன்­னா­ருக்கும் இடை­யே­யான "ஹனுமான்" பாலம் அமைக்­கப்­பட மாட்­டாது என பாரா­ளு­மன்­றத்தில் திட்­ட­வட்டமாக அறி­வித்தார். தனது இந்­திய விஜ­யத்தின் போது இப் பாலம் அமைப்­பது தொடர்­பாக பேச்சுவார்த்­தைகள் நடத்­தப்­ப­ட­வில்லை என்றும் தெரி­வித்தார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் இந்­திய மத்­திய அரசின் அமைச்­ச­ரொ­ருவர் தனுஷ்­கோ­டிக்கும் தலை­மன்­னா­ருக்கும் இடையே பாலம் அமைக்­கப்­படும் என்றும் அது தொடர்­பாக இலங்­கை­யுடன் பேசப்­படும் எனவும் தெரி­வித்துள்ளார். உள்­நாட்டில் எமது அரசாங்கம் தொடர்­பாக எது­வித செய்­தியும் இல்­லாத நிலையிலும் வரவு செலவு திட்­டத்தை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையால் வெற்றி கொண்­டதாலும் அரசை விமர்­சிக்க செய்­திகள் இல்­லாத நிலை காணப்படுகின்றது.

உத­ய­கம்­பன்­பில போன்­ற­வர்கள் ஹனுமன் பாலம் தொடர்பில் இந்­திய அமைச்சின் கருத்தை பெரி­து­ப­டுத்தி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். தேசப்­பற்று தொடர்­பாக பேசும் கம்­மன்­பில உள்­நாட்டில் பிர­தமர் சொன்­னதை நம்­பாது இந்­திய மத்­திய அமைச்­சர்கள் கூறியதை நம்­பி பேசு­கிறார். அதன் மூலம் அவரது அர­சியல் வங்­கு­ரோத்து நிலை புலப்­ப­டு­கி­றது.

இந்­தி­யாவின் தமிழ் நாட்டில் ஏற்­க­னவே சேது சமுத்­திரம் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன்­போது இந்­தி­யா­விற்­குள்ளே எதிர்ப்பு தோன்­றி­யது. சூழல் பாதிக்­கப்­படும், உயிரியல் பன்­மு­கத்­தன்மை அழி­வுக்­குள்­ளாகும் என கடும் எதிர்ப்பு தலை­தூக்­கி­யதால் சேது சமுத்­திர திட்டம் கைவி­டப்­பட்­டது. இதே­போன்று ஹனுமான் பாலம் அமைக்கும் இந்­தி­யாவின் யோச­னைக்கும் அந் நாட்­டுக்­குள்­ளேயே எதிர்ப்பு கிளம்பும்.

எமது நாட்­டுக்கு ஹனுமான் பாலம் அவ­சி­ய­மில்லை. இந்­திய அமைச்­சரின் யோச­னையை நாம் ஏற்றுக் கொள்­ள­மாட்டோம். நிரா­க­ரிக்­கின்றோம் என்றார். இந்­திய மத்­திய அமைச்சர் பொன். ராதா­கி­ருஷ்ணன் அண்­மையில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்கப்படும் என்றும் அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 35000 கோடி ரூபாவை வழங்க தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் இலங்கை அரசுடன் பேசப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.