31 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளை கெளரவித்த DIMO Academy of Technical Skills

Published By: Digital Desk 5

11 Apr, 2023 | 05:18 PM
image

DIMO Academy of Technical Skills (DATS), 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு பட்டமளித்து கௌரவிக்கும் முகமாக, சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது 31ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நடாத்தியிருந்தது.

உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Automobile Mechatronics தொழில்நுட்ப வல்லுநர்கள்களின் மற்றொரு தொகுதியை இலங்கையில் உருவாக்கியுள்ள இந்த விழாவானது, கல்வியகத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும்.

இவ்விழாவில் German Diploma in Automobile Mechatronics மற்றும் Certificate Course in Automobile Mechatronics கற்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு அவர்களுக்கான பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Automobile இனை Mechanical, Electrical, Electronics, IT அம்சங்களாக ஒருங்கிணைத்து ஒரே விரிவான திறனுடன் Automobile Mechatronics ஆக வழங்கும் இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (VET) நிறுவனமாக DATS விளங்குகின்றது.

இப்பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Holger Seubert கலந்து கொண்டார். அத்துடன் இலங்கையிலுள்ள ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக (AHK) பிரதிநிதிகள் குழுவின் பிரதம பிரதிநிதி Marie Antonia von Schönburg மற்றும் Goethe - Institute Colombo நிறுவனத்தின் பணிப்பாளர் Stefan Winkler ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதே போன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் மஹேந்திர குமாரசிங்க, இலங்கை மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் திட்டமிடல் பணிப்பாளர் ரி. செந்தூரன், DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே, DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/ CHRO திருமதி தில்ருக்ஷி குருகுலசூரிய உள்ளிட்ட பல அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கருத்து வெளியிடுகையில், “தொழில்சார் கல்வியை அபிவிருத்தி செய்வது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் காரணியாக அமையும். Automobile Mechatronics, Electric, Hybrid வாகன தொழில்நுட்பம் முதல் தொழிற்சாலை பொறியியல் வரையிலான தனது பல்வேறுபட்ட பயிற்சி பாடநெறிகள் மூலம் நாட்டில் தொழிற்கல்வியை மேம்படுத்துவதில் DATS முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கையில் உள்ள இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கும் DIMO நிறுவனமானது, அவர்களது சரியான திறமைப் பங்காளியாக இருந்து சரியான திறன்களுடன் அவர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது." என்றார்.

Diploma in Automobile Mechatronics டிப்ளோமா பாடநெறியானது, கற்றலை மையமாகக் கொண்ட ஒரு பயிற்சிக் கருத்திட்ட பாடநெறியாகும். இது ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தால், வகை A இரட்டை தொழிற்பயிற்சி திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது ஜேர்மன் தகுதி பாடநெறியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் பட்டதாரிகள் ஜேர்மனியில் வேலை செய்ய தகுதியுடையவர்களாவர். Certificate in Automobile Mechatronics சான்றிதழ் பாடநெறியானது, DIMO நிறுவனத்தின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டம் DIMO நிறுவனத்தின் நீண்ட கால நிலைபேறான தன்மை முயற்சியின் ஒரு பகுதியாக விளங்குவதோடு, உள்ளூர் இளைஞர்களை சரியான தொழிற்கல்வியில் ஈடுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து Certificate in Automobile Mechatronics இலவச சான்றிதழ் பாடநெறி மூலம் 600 வாகன தொழில்நுட்ப வல்லுனர்களை நாட்டிற்காக உருவாக்கியுள்ளது.

அனைத்து DATS வசதிகளும் சமீபத்திய பயிற்சி உபகரணங்களை கொண்டுள்ளதோடு, குறித்த 2 பாடநெறித் திட்டங்களின் மாணவர்களுக்கும் DIMO நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த பயணிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கான பட்டறைகளில் பயிற்சி பெறும் வாய்ப்பும் உள்ளது.

இப்பாடநெறிகள் தொழில்துறை தேவைகள் மற்றும் நிதி, கணக்கியல், தொழில் முனைவு, தொழிலாளர் சட்டம் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இன்று, DATS மூலம் கற்ற பல முன்னாள் மாணவர்கள் இலங்கை, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர். உலகளாவிய ரீதியில் Automobile துறையில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் போட்டித் தன்மை கொண்ட மற்றும் திறமையான பட்டதாரிகளை உருவாக்கியதில் நிறுவனம் பெருமை கொள்கிறது.

Automobile Mechatronics பாடநெறிகளை வழங்குவதைத் தவிர, Diploma in Plant Engineering for Sanitary Heating and Air Conditioning டிப்ளோமாவையும் DATS வழங்குகிறது.

இது ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட, நவீன கட்டட சேவைகளில் காணப்படும் உலகத் தரம் வாய்ந்த தொழிற்கல்வித் தகுதியாகும். அது மாத்திரமன்றி, DATS ஆனது இலங்கை மற்றும் மாலைதீவில் உள்ள FH Aachen பல்கலைக்கழகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது  பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளம் மாணவர்களுக்கு ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.

பட்டமளிப்பு விழாவில் DIMO நிர்வாகத்தினர் மற்றும் DATS பிரதிநிதிகளுடன் DATS பட்டதாரிகள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆளுமையுடன் 6வது அகவையில் Capital FM! ...

2023-12-01 19:15:50
news-image

25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் Ocean...

2023-12-01 10:43:40
news-image

சிறந்த முறையில் பரிவர்த்தனை : RDB...

2023-11-30 18:40:52
news-image

பாசிக்குடா மீளத்திறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் விசேட...

2023-11-29 20:54:15
news-image

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதியியல்...

2023-11-29 16:46:41
news-image

MMBL Money Transfer தனது 3000...

2023-11-27 18:00:41
news-image

தரச்சிறப்பைக் கொண்டாடுவோம் : பல விருதுகளையும்...

2023-11-24 14:10:30
news-image

2023இன் 9 மாதங்களுக்கு ரூபா 11.4...

2023-11-23 18:12:34
news-image

எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்ஸ் குழுமம் புத்தாக்கம் மற்றும்...

2023-11-22 18:51:54
news-image

நவீன மயமாக்கலைத் தொடர்ந்து Sun Siyam...

2023-11-18 17:10:26
news-image

ஹோர்ட்டன் சமவெளி பகுதியில் வனாந்தரச் செய்கையை...

2023-11-17 09:01:42
news-image

படைப்பாற்றல், புத்தாக்கம், ஒன்றுபட்ட உழைப்பைக் காண்பிக்கும்...

2023-11-16 18:21:17