வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி.

Published By: Ponmalar

11 Apr, 2023 | 05:28 PM
image

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டுவரும் முகமாக முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது.

சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் மங்கையர்க்கரசி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் குறித்த இசை போட்டிகள் இடம் பெற உள்ளன.

இப்போட்டிகளில் பங்கெடுக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் போட்டி இடம்பெறுகின்ற தினத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையான காலப்பகுதியில் போட்டி இடம்பெறும் மண்டபத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

போட்டியாளர்கள் தனிப்பாடல், தனிவாத்திய இசைக்கே அனுமதிக்கப்படுவர். போட்டியாளர்கள் தமக்கு விருப்பமான ஏதாவது ஒரு பாடலினை (கர்நாடக சங்கீதம்/ திரையிசை/ மேலைத்தேயம்) 6 நிமிடங்களுக்குள் பாட இசைக்க முடியும். வாத்தியம் இசைப்போர் குறித்த குறித்த வாத்தியக்கருவியை கொண்டுவருதல் வேண்டும்.

போட்டி நிறைவுறும் வரை பாதுகாவலர் போட்டியாளருடனிருக்க வேண்டும். இப்போட்டிகளில் அனைத்துவிதமான மாற்றுத்திறனாளிகளும் வயது வேறுபாடின்றி பங்கெடுக்க முடியும் என இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய சாவிகா சங்கீத அறிவாலயத்தினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06