வசந்த காலத்தில் நுவரெலியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் அதிகூடிய விலையில் பொருட்கள் விற்பனை

Published By: Digital Desk 5

11 Apr, 2023 | 02:52 PM
image

நுவரெலியா ஏப்ரல் மாத வசந்த காலம் ஆரம்பமாகிய நிலையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் சித்திரை புத்தாண்டுடில் நீண்ட விடுமுறை காணப்படுவதனாலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடு முறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர் .

வசந்த காலத்தினை வாய்ப்பாக பயன்படுத்தி நுவரெலியா நகர பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா நகர பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் அரசாங்கத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலைக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் , விலைக்கு மேலதிகமாக பணம் அறவிடப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா கிரகறி வாவி பகுதியிலும் , பிரதான நகரிலும் இயங்கி வருகின்ற சில்லறை மற்றும் வசந்த கால தற்காலிக வர்த்தக நிலையங்களிலும் குறிப்பாக ஹோட்டகளில் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கே விற்பனை செய்து வருவதாகவும் எந்த வித கட்டுப்பாட்டு விலைக்கும் பொருட்கள் விற்கப்படுவதில்லை குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக நுவரெலியா வசந்த காலத்தினை முன்னிட்டு அமைக்கப்பட்ட தற்காலிக வியாபார நிலையங்களில் கோதுமை மாவில் செய்யப்படும் உணவு பொருட்கள் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் முட்டை ஒன்று 44 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் முட்டை ஆம்லெட் ஒன்று 110 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன குறித்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டாயம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை , காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக நுவரெலியா மாநகரசபையின் விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமானிடம் வினவிய போது நுவரெலியா வசந்த காலத்திலும் சித்திரை புத்தாண்டுபண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு நாங்கள் அறிவித்தல் வழங்கி உள்ளோம் மேலும் மாநகரசபை மூலம் தனியான குழு மூலம் சிற்றுண்டிச்சாலைகள் ஹோட்கலில் வர்த்தக நிலையங்கள், மொத்த விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் , தரமற்ற அசுத்தமான உணவு வகைகளை விற்பனை செய்த நிலையங்களுக்கு சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகளுக்கு...

2024-05-25 10:45:52
news-image

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு...

2024-05-25 10:21:52
news-image

களுத்துறை துப்பாக்கிச் சூடு ; மூவர்...

2024-05-25 10:02:02
news-image

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர்...

2024-05-25 10:24:45
news-image

கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீ...

2024-05-25 09:40:05
news-image

இன்றைய வானிலை

2024-05-25 06:48:49
news-image

தேர்தலில் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு...

2024-05-24 22:31:14
news-image

மரங்கள் விழும் ஆபத்து இருந்தால் 117...

2024-05-24 22:10:06
news-image

பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில்...

2024-05-24 20:48:18
news-image

கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது

2024-05-24 19:34:10
news-image

யாழில் 1286 இலவச காணி உறுதிப்...

2024-05-25 10:17:05
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 4 பெண்கள் உட்பட...

2024-05-24 19:08:03