தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கஸ்டடி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹெட் அப் ஹை..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
'மாநாடு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கஸ்டடி'.
இதில் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத்ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா மற்றும் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
காவல் துறையில் பணியாற்றும் கடைநிலை காவலர் ஒருவரை பற்றிய வாழ்வியலை மையப்படுத்தி எக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற 'ஹெட் ஆப் ஹை..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலில் இடம்பெறும் தமிழ் சொற்களை பாடலாசிரியர் கருணாகரன் எழுத, ஆங்கில சொற்களை ஸ்ரீ சிவானி வி பி எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடலை பின்னணி பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா, அசல் கோளாறு, அருண் கவுண்டன்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். காவலர்களைப் பற்றியும், காவல்துறை பற்றியும் நேர் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்தப் பாடல் அமைந்திருப்பதால், இந்த பாடலுக்கு இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM