(எம்.எம்.சில்வெஸ்டர்)
இம்மாதம் முதல் குடிநீர் கட்டணத்தின் நிலுவைத் தொகையை செலுத்தாத சகல அரச நிறுவனங்களினதும் குடிநீர் கட்டண பட்டியல்களிருந்து 2.5 சதவீதம் மேலதிக கட்டணத்தை அபராதமாக வசூலிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் 70 கோடி ரூபாவுக்கும் அதிகமான குடிநீர் கட்டணத்தை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாக குறிப்பிடுகிறது.
பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகள் ஆகியவை நீண்ட காலமாக குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறிய அரச நிறுவனங்களாகும்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படுவது குறித்து, சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
பொதுவாக, குடிநீர் கட்டணம் 90 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படும்.
மேலும், குடிநீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால், 1.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறிய அதிகாரி, பொதுவாகவே இந்த தள்ளுபடியானது சகல பாவனையாளர்களுக்கும் வழங்கப்படகின்ற ஓர் விடயமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM