போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட பஹாமாஸ் தீவுக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் நேற்று (10) கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
31 வயதுடைய நைஜீரிய பிரஜையான இவர், நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும் அங்கிருந்து மொராக்கோவுக்கும் சென்றுள்ளார்.
அதன் பின்னர் நேற்று மாலை 4.20 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் KR-654 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவரது கடவுச் சீட்டை பரிசோதித்தபோது அது போலியானது என உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM