கம்பஹாவில் 727 வீடுகள், மினுவாங்கொடையில் 78 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு

Published By: Digital Desk 3

10 Apr, 2023 | 02:35 PM
image

"உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் 50 வீதமான வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 2021ஆம் ஆண்டு 12,231 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு அதில் 6,039 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 2022ஆம் ஆண்டு 1,465 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 25 வீடுகளே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 1,215 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் 727 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மினுவாங்கொடை தொகுதியில் மட்டும் 159 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 78 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு,  "உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்திருந்தது. 

எவ்வாறாயினும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், இந்த வருட ஆரம்பத்தில் வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கடந்த வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாத வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக திறைசேரியினால் 3,750 மில்லியன் ரூபா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ,  "உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வேலைகளை ஆரம்பித்து பூர்த்தி செய்ய முடியாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை வீடமைப்புத் திட்டம்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சியால் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது சொந்த வீடு இல்லாத குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கானது. இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இலங்கையிலுள்ள அனைத்து 14,022 கிராம சேவைப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவுக்கும் ஒரு வீடாக 14,022 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42
news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54