அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் கிடைத்திட இறை பிரார்த்தனை செய்வோம் - இந்து குருமார் அமைப்பின் தலைவர் 

Published By: Nanthini

10 Apr, 2023 | 03:56 PM
image

வ்வருடம் எமது மக்களினதும், ஏனைய சமூகத்தினதும் அனைத்து இடர்களும் நீங்க வேண்டும். ஒவ்வொருவரினதும், சமூகத்தினதும் தனித்துவம், வழிபாட்டுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பண்பாட்டு விழுமியங்கள் மதித்து பேணப்பட வேண்டும் என இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தெரிவித்துள்ளார். 

இவ்வருட தமிழ்ப் புத்தாண்டுக்கான தனது பிரார்த்தனை செய்தியில் இவ்வாறு குறிப்பிட்ட அவர், அதில் மேலும் தெரிவிக்கையில், 

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். 

பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணிநேரம், 11 நிமிடங்கள், 48 நொடிகள் ஆகின்றன. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். 

சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகிறது.

ஆகவே, தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

'சோபகிருது' எனும் மங்கல நாமத்துடன் புதிய வருடம் உதயமாகிறது. இவ்வருடம் எமது மக்களினதும் ஏனைய சமூகத்தினதும் அனைத்து இடர்களும் நீங்க வேண்டும். 

ஒவ்வொருவரினதும் சமூகத்தினதும் தனித்துவம், வழிபாட்டுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பண்பாட்டு விழுமியங்கள் மதித்து பேணப்பட வேண்டும்.

இவ்வாறான நிலை பேணப்பட்டு, அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பலமும் பெற்று, சுபீட்சமான இன்ப வாழ்வும் வளர்ச்சியும் உயர்ச்சியும் பெற்று நிலைக்க வேண்டும் என அன்பே உருவான பரம்பொருளை வேண்டி பிரார்த்தனை செய்து மனமார்ந்த  நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் இந்து குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:00:49
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21