பெற்றோர்  பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்

Published By: Priyatharshan

09 Jan, 2017 | 03:50 PM
image

வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுட்டனர்.

குறித்த பாடசாலையில் 538 இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர். பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது. 


பாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப்பற்றாக்குறை என்பன காரணமாக மரநிழல்களிலும், நிலத்திலும் இருந்தே மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனவே, மாகாண, மத்தி அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு மாணவர்களின் கல்வி உதவவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், கிராமப் புறப் பாடசாலைகளை புறக்கணிக்காதே, கல்வி அமைச்சரே எமது பிள்கைளின் எதிர்காலத்தை பாழாக்காதே, நல்லாட்சி அரசே எமது பிள்கைளை படிக்கவிடு' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களும் எழுப்பினர்.


இதேவேளை, இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிடின் தாம் எதிர்வரும் நாட்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் பேவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் மஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41