சமனலவெவ அணைக்கட்டுக்கு சென்றிருந்த 18 வயது யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி தனது காதலனுடன் அணைக்கட்டு பகுதிக்குச் சென்றுள்ளார், இதன்போது சந்தேக நபரான கான்ஸ்டபிள் காதலனின் கைகளுக்கு கைவிலங்கிட்டு யுவதியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கு வைத்து குறித்த கான்ஸ்டபிள் யுவதியின் ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
யுவதியைக் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, அந்த கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் முன்னர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஒலிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM