(நெவில் அன்தனி)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
மயான்க் மார்க்கண்டேயின் துல்லியமான பந்துவீச்சும் ராகுல் திரிபதியின் அபார அரைச் சதமும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் கடும் சிரமத்தை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் ஷிக்கர் தவானும் கடைநிலை வீரர் மோஹித் ரதீயும் கடைசி விக்கெட்டில் தாக்குப்பிடித்து துடுப்பெடுத்தாடியதாலேயே பஞ்சாப் கிங்ஸ் கௌரவமான நிலையை அடைந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் 9 விக்கெட்கள் ஒரு பக்கத்தில் சரிய மறுபக்கத்தில் ஷிக்கர் தவான் தனி ஓருவராகப் போராடி 66 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 99 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
22 ஓட்டங்களைப் பெற்ற சாம் கரனுடன் ஷிக்கர் தவான் 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுசேர்க்க முயற்சித்தார். ஆனால் 15ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் 9ஆவது விக்கெட் வீழ்ந்தபோது பஞ்சாப் கிங்ஸ் அணியின் மொத்த எண்ணிக்கை வெறும் 88 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், ஷிக்கர் தவானும் 11ஆம் இலக்க வீரர் மோஹித் ரதீயும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் பஞ்சாப் கிங்ஸ் கௌரவமான நிலையை அடைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி விக்கெட்டில் பகிரப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையைக் கொண்டச சாதனைமிக இணைப்பாட்டம் இதுவாகும். அறிமுகவீரர் மோஹித் ரதீ ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மயான்க் மார்க்கண்டே 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உம்ரன் மாலிக் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 17.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ராகுல் திரிபதி, ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ராகுல் திரிபதி 74 ஓட்டங்களுடனும் ஏய்டன் மார்க்ராம் 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஆட்டநாயகன்: ஷிக்கர் தவான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM