‘மனிதம்’ நாட்டிய நிகழ்வு

Published By: Ponmalar

11 Apr, 2023 | 11:24 AM
image

தேசநேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கனாதன் அவர்களது அரு ஸ்ரீ கலைஅரங்கத்தினர் வழங்கும் ‘மனிதம்’ நாட்டிய நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி (ஏப்ரல்) மாலை 6 30க்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்கும்படி நிகழ்வின் ஏற்பாட்டாளர் வேண்டி நிற்கிறார். 

நல் மனிதப் பண்புகளில் ஒன்றான மனிதத்தை மையமாகக் கொண்டு மருத்துவத்துறையில் நாம் அனைவரும் கொண்டிருக்கவேண்டிய விழிப்புணர்வைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த நாட்டிய நிகழ்விலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரத்துங்க அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன், மனிதநேய அறங்காவலகத்தின் தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை மற்றும் வீரகேசரி தினசரி & வார இதழ்களின் ஆசிரியர்  எஸ். ஸ்ரீகஜன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். 

யாழ். மருத்துவபீட அறுவை சிகிச்சை பிரிவின் கீழ் யாழ். போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள டேகேர்யூரோலாஜிக்கல்தியேட்டர் நிர்மாணத்திற்கான தாராள உதவி வழங்கவேண்டும் என்பது இந்நிகழ்வின் பிரதான செய்தியாக அமைகிறது. அத்துடன் அமரர் சுந்தரம் டிவகலாலா அவர்களின் சேவைகளின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்காக தனது முழுமையான அர்ப்பணிப்பை வழங்கும் தேசநேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கனாதன் அவர்களதும் அவரது கலையரங்கத்தினரும் சேவை மிக்க பாராட்டுக்குரியது.

இன, மத, மொழி பாகுபாடின்றி அவரும் அவரது கலையரங்கத்தினரும் பற்பல நிகழ்வுகளைத் தயாரித்து வழங்கியுள்ளனர். எப்போதும் அவர்களது நலன்விரும்பிகளும் கலை ஆர்வலர்களும் அனைத்து நடன நிகழ்வுகளையும் வரவேற்று, வெற்றிபெறச் செய்துள்ளனர். இம்முறையும் அக்கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆர்வலர்களின் ஆதரவிற்தான் நிறைவான வெற்றியை ஈட்டும். அந்தவகையில் ஏப்ரல் 29ஆம் திகதி 6 30மணிக்கு அனைவரையும் நிகழ்விற் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது (6 15க்கு முன்னரே ஆசனங்களில் அமரவேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள்).   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08