ஐகான் விருது பெறும் சிரஞ்சீவி, தனுஷ்!

Published By: Nanthini

10 Apr, 2023 | 11:42 AM
image

ந்திய தொழில் கூட்டமைப்பானது தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக எதிர்வரும் ஏப்ரல் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் சென்னையில் நடத்தவுள்ள 'தக்ஷின்' உச்சிமாநாட்டில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்குபற்றவுள்ளனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பானது தனியார் துறை, பொதுத்துறை நிறுவனங்களையும், சிறு, - குறு, நடுத்தர தொழிலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களையும் அடக்கிய அரசு சாராத, லாப நோக்கமற்ற தொழில்துறை நிபுணர்களால் உருவாக்கப்பட்டு, பேணப்பட்டு வரும் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் 'தக்ஷின்' உச்சிமாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக திரைத்துறை பிரபலங்களும், பங்கேற்பாளர்களும் பங்குபற்றினர். 

மேலும், இந்த மாநாடு இணையத்தளம் வழியாக எட்டரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் கலைத்துறை ஆர்வலர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்தது. 

இந்த மாநாட்டில் தமிழ் திரைத்துறையினர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பத்து அம்ச கோரிக்கையை முன்வைத்தனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இவ்வருடம் தக்ஷின் இரண்டாவது உச்சிமாநாடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது. 

இந்த மாநாட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரைத்துறையிலிருந்து ஏராளமான விற்பன்னர்கள் பங்குபற்றுகிறார்கள். 

மேலும், இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்ட தலைப்புகளில் திரைத்துறையினர் உரையாற்றுகிறார்கள். 

மேலும், இந்த ஆண்டில் திரைத்துறை சார்பாக ஐகன் விருது தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் சிரஞ்சீவிக்கும், இளம் ஐகான் விருதினை தமிழ் திரையுலக நட்சத்திர நடிகரான தனுஷுக்கும் வழங்கப்படுகிறது. 

இந்த விருதினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் வழங்குகிறார்கள்.

தென்னிந்திய திரைத்துறை ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறையின் வளர்ச்சிக்காக நடைபெறும் இந்த உச்சிநாட்டில் கலைத்துறை மீது ஈடுபாடு கொண்டிருக்கும் அனைவரும் பங்குபற்ற வேண்டும் என விழா குழுவினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்