ஹம்பாந்தோட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பநிலையில் கைதுசெய்யப்பட்ட மேலும் 32 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.